வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பெற்றோர், ஆசிரியர் கூட்டத்திற்கு கல்லூரியின் முதல்வர் ஜான்லூயிஸ் தலைமை தாங்கி தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் அவசியம் மற்றும் பெற்றோருக்கான வழிகாட்டுதல் மற்றும் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார்.
அனைத்து துறை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.
மேலும் முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் தமிழக அரசின் மாணவர் நலத்திட்டங்களின் செயலாக்கம் பற்றி விளக்கினார். பெற்றோர்கள் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது. பெற்றோர்கள் அடிக்கடி கல்லூரிக்கு வந்து மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களின் கருத்தும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிப் பொறியியல் துறை தலைவர் ராஜ்குமார் ஒருங்கிணைத்தார், கல்லூரியின் கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள் மற்றும் வாரியத் தேர்வு முடிவுகளை புள்ளிவிவரத்துடன் பெற்றோர்களுக்கு இயந்திரவியல் துறையின் ஆசிரியர் உதயசங்கர் எடுத்துரைத்தார்.
இறுதியாக இந்நிகழ்ச்சியின் இணை ஒழுங்கினைப்பாளர் கணிப்பொறியில் துறை பேராசிரியை அனிதா அனைவருக்கும் நன்றி கூறினார்.