டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார்.
தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி முன்னிலை வைத்தார்.பாரதிய ஜனதா கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராமநாதன், அருள்செல்வன், எஸ்.வி.அன்புராஜ் , தென்காசி முத்துக்குமார், தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், மகேஸ்வரன், ராம்குமார்
யோகா சேகர், நாகராஜன், விஸ்வநாதன், கருப்பசாமி, ராஜ்குமார், குற்றாலம் செந்தூர் பாண்டியன், வெங்கடேசன் திருமுருகன், மாரியப்பன், செல்லத்துரை,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends