துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் ந.முரளி தலைமையில் பாலக்கரை கலைஞர் திடல் மற்றும் சிலோன் ஆபீஸ் கலைஞர் திடல் ஆகிய பகுதிகளில் 17/05/2025 அன்று “நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு” சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர் நெய்வேலி வீர.ராமசந்திரன் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்திட திமுகவினர் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் பேசினார்.
இதில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க கமல், எம்எல்ஏ ஸ்டாலின் குமார்,முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் இள. அண்ணாதுரை (மத்திய) எம்.வீரபத்திரன்(மேற்கு ), சிவ.சரவணன் (கிழக்கு),கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,மாவட்ட பொது குழு உறுப்பினர் கிட்டப்பா,மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், அவைத்தலைவர் தர்மலிங்கம், நகர துணைச் செயலாளர்கள் இளங்கோவன், பிரபு, பொருளாளர் சீனிவாசன்,நகர மன்ற தலைவர் இ.செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அம்மன் பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார்,வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதர்ஷினி திருமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், ஐடி விங்க் மாவட்ட அமைப்பாளர் சேகர்,பேச்சாளர் துரை பாண்டியன், பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி சிலம்பரசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்து துரை, நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், இளையராஜா, நித்யா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன்,செந்தில்குமார், சுதாகர், பாஸ்கரன்,முத்து மாங்கனி,
ஒன்றிய (ம) துணை செயலாளர் அன்பு காந்தி, 18வது வார்டு மோகன், நல்லுசாமி, சசிகுமார், சுரேஷ்,மாவட்ட பிரதிநிதிகள் ரெங்காதபுரம் கார்த்திக், நடுவலூர் செல்வகுமார், தொண்டரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் யோகராஜ், மெடிக்கல் பிரேம், செங்குட்டுவன்,உள்ளிட்ட திமுகவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பெருமாள், ஆட்டோ மணிகண்டன் நன்றி உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்