வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் படியும், மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும்,வலங்கைமான் வட்டம் அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரித்து வார மங்கலம் மருத்துவ அலுவலர் முகமது தாரிக் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் கோபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருந்தாளுனர் நிவேந்திரன் மற்றும் ஆய்வக நுட்புணர் சசிகுமாரி மற்றும் செவிலியர்கள் விஜயலட்சுமி இலக்கியா ஜெயலட்சுமி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் நோய்ப் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் நோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.