தென்காசி அருகே உள்ள இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர்
இ.விலக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானா பராமரிப்பு இன்றி புற்கள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதனை பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை முடநீக்கியல் மருத்துவரகள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி கிளப் ஹோம்வே பிராப்பர்டீஸ் டிசைனர் இன்டீரியர் சார்பில் பராமரிப்பு செய்து பூஞ்செடிகள் நடப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு பூங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இலத்தூர் இ.விலக்கு பகுதியில் உள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ். முத்துராமன் தலைமை தாங்கினார். செயலாளர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன் என்ற ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் உதவி ஆளுநர் செல்வகணபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி எலும்பியல் துறை தலைவரும், தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்க தலைவருமான பேராசிரியர் என்.மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்பு பூங்காவை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்கத்தின் இணை செயலாளர் டாக்டர் எஸ்.மாரிமுத்து. தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.எம்.மணி, நெல்லை ஆர்த்தோ கிளப் தலைவர் டாக்டர் ஐவன் சாமுவேல், செயலாளர் டாக்டர் தாமோதரன், டாக்டர் வேதமூர்த்தி டாக்டர் ஜெஸ்லின், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சீன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த விழாவில் கோவில்பட்டி டாக்டர் தாமோதரன், தென்காசி டாக்டர் திருமலை குமார், டாக்டர் மது, டாக்டர் பிரபாகரன், மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள், ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் சண்முகம், சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் திலிப் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்துராமன் தலைமையில் நெல்லை முடநீக்கியல் மருத்துவரகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *