துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் டாக்சி ஸ்டாண்ட் அருகில் டிரைவர் ராஜகணபதி ஏற்பாட்டில் ஸ்ரீ ஆதிமாரியம்மன் கோயில் அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து ஸ்ரீ ஆதி மாரியம்மன் சுவாமிக்கு இனிப்பு பொங்கல், சுண்டல் பிரசாதங்கள் படையலிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் தலைமை எழுத்தர் முருகானந்தம் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் கணபதி ,கருப்புசாமி, திருமூர்த்தி, ராஜா, பாலமுருகன் ,முஸ்தபா, ஆதி வைத்தியர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு பொங்கல் ,சுண்டல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்