புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா களத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை சரி செய்யும் வகையில் பள்ளி கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முக கவசம் அணிந்து மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இல்லம் தேடி கல்வி திட்ட முன்னாள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும்பொழுது

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தாக்குதலில் உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை முதல்வர் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து இல்லம் தேடி கல்வித் திட்டம் என்னும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்தி தமிழக முழுவதும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மையங்களை திறந்து மாணவர்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை சரி செய்தனர்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் மாணவர்கள் அடிப்படை திறன்களான தமிழ் வாசித்தல், ஆங்கில வாசித்தல், கணிதம் உள்ளிட்ட அடிப்படை திறன்களை எளிதில் கற்றுக் கொண்டனர்.இத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கைகள் பாராட்டும், உலக நாடுகளில் பாராட்டும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் என்னும் அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி குழந்தைகளின் உடல் நலத்தை மேம்படுத்தக்கூடிய சிறப்பான திட்டமாகும். காலை உணவு திட்டத்தால் மாணவ்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தை உலக நாடுகளான கனடா இங்கிலாந்திலும் பின்பற்றப்படுகிறது.

ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டமும், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது .

தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் கலைத் திருவிழா, தேன்சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியர், வானவில் மன்றம், வாசிப்பு இயக்கம் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி அரசு பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் வழங்கக்கூடிய 7.5% இட ஒதுக்கீடு மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு வழங்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் சேர்ந்து பயன்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கான கல்வி கட்டணமும் அரசு செயல்படுத்துகிறது.நான் முதல்வன் திட்டத்தால் திறன் மிகுந்த மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் நான் முதல்வன் திட்டம் போட்டித் தேர்வு மூலம் குடிமைப்பணி தேர்வுகளில் 57 மாணவர்களில் 50 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான நிதிகளை ஒதுக்கி மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் கற்றல், கற்பித்தல் பள்ளிகளில் உள்கட்டமைப்பு அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கணினி ஆற்றல் மேம்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு அதிகப்படியான நிதிகளை ஒதுக்கியும், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும், குழந்தைகளின் விளையாட்டு திறமைகளை ஊக்கப்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *