சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டத்தில் நான்காம் ஆண்டு மாணவிகள் (பி.எஸ். சி. (ஆக்.) ) ஹரிணி. கா, ஸ்ரீ ரஞ்சிதா. வெ, ராஜேஸ்வரி. பு, சீதா. க, பூமிகா. க, வினோதிதா. சி, நந்தினி. சோ, கேசவாவர்த்தினி. ச,ஆப்ரின் ஜூல்ஃபியா.தி, சுவேதா. ர ஆகியோர், வேளாண்மை அறிவியல் இயக்கம் இயக்கும் மாணவர் பயிற்சி திட்டத்தின் (RAWE) கீழ் தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக, பூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா” இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை, வண்ண ஒட்டும் பொறி ஆகியவற்றை மூலக்கடை கிராமத்தில் விவசாயிகளுக்கு நேரில் காண்பித்து விளக்கினர்.