செங்குன்றம் செய்தியாளர்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாதவரம் சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் மாதவரம் டிரக் டெர்மினல் இணைந்து 500 பேருக்கு அன்னதானம், தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவரும் லயன்ஸ் சங்க ஓட்டுநர் தின மாவட்டத் தலைவருமான வி.ஜி. ஜெயக்குமார் தலைமையில் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.


இதில் செயலாளர் ஆர்கே. தக்ஷணா மூர்த்தி, பொருளாளர் ஆர்.மனோகரன் , லயன்ஸ் கிளப் ஆஃப் டிரக் டெர்மினல் நிர்வாகிகள் பரணீதரன், லயன்ஸ் சங்க தலைவர் இந்திரா, செயலாளர் நித்திய கல்யாணி, பொருளாளர் ஜெயராணி, உமா சீனிவாசன், மாவட்டத் தலைவர் யுவராஜ், மண்டலத் தலைவர் கணேசன், வட்டாரத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.