துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ,ஜேசிபி பொக்கிலின் இயந்திர உரிமையாளர்கள், ஒரு யூனிட் டிப்பர் டிராக்டர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரியும், டோல்கேட் கட்டணங்கள் லாரி ஜேசிபிக்கான இன்சூரன்ஸ் பிரீமியம், உதிரிபாகங்கள் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், லாரி ஜேசிபி வாகனங்களுக்கான வாடகையை உயர்த்தக் கோரியும், மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரியும்
சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் கடந்த (ஏப்ரல் 28 – 30)மூன்று நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் மாநில சம்மேளன தலைவர் செல்வ இராசாமணி தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இடத்தில் இருந்து பிரிவு ரோடு ரவுண்டானா திருச்சி ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோஷமிட்டவாறு பேரணியாக சென்று வட்டாட்சியர் மோகனிடம் மனு கொடுத்தனர்.
இதில் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராஜா, மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்க தலைவர் மஞ்சு நாத், செயலாளர் தோமினிக் ராஜ், பொருளாளர் தர்மர், மக்கள் அதிகாரம் ஜீவா, லதா மற்றும் முருகன், பெருமாள், சேதுபதி, அப்பர் ராஜா மற்றும் டிப்பர் லாரி, ஜேசிபி பொக்கிலின், டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் முத்தையன் அறிவுறுத்தலின் காவல் உதவி ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா உள்ளிட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்