மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது குளுகுளு குற்றாலமாக காணப்படும் குற்றால அருவிகள் வெயிலின் தாக்கத்தால் கலை இழந்து நீர் வரத்து இல்லாமல் வெறும் பாறைகளாக காட்சியளிக்கின்றன
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் பெரும் அளவில் பாதித்து வருகிறது உணவு தேவைக்காக விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி புலி அருவி பகுதிகளில் நீர் வரத்துகள் இல்லாததால் வறண்ட நிலையில் மரங்களும் காணப்படுவதால் இப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் உணவுகள் இல்லாமல் மிகவும் வாடிய நிலையில் காணப்படுகின்றன
இருந்தாலும் அவ்வப்போது இந்த குரங்குகளின் அட்டகாசம் காண்போரை மனம் மகிழச் செய்கிறது அப்படி ஒரு நிகழ்வுதான் இன்று நாம் எடுத்த புகைப்படம் வெயிலின் கொடுமை தாங்காமல் யாரோ விட்டுச் சென்ற டவலை (துண்டு) தன் மீது போர்த்திக் கொண்டு நமக்கு கொடுத்த பிரத்தி யோக புகைப்படம். இயற்கை நேசிப்போம் அதைச் சார்ந்த உயிர்களையும் காப்போம்.