
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா…
கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட மொரட்டாண்டியில் திமுக கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டின் பேரில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனை ஒட்டி மொரட்டாண்டி பைபாஸ் சாலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் டாக்டர் இரா. லட்சுமணன் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக இலவச புடவைகள், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் டப்பு உள்ளிட்டவற்றை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மாநில நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், வானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா பி.கே.டி முரளி, முன்னாள் சேர்மன் வி.எம்.ஆர் சிவா, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் தலைமையில் ஆதரவாளர்கள் வெகு சிறப்பான முறையில் செய்திருந்தனர்