பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா ……
மேனாள் தமிழ் விரிவுரையாளர் திருநாவுக்கரசு பங்கேற்பு ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா பள்ளியின் மாணவி ரதிதேவி அரங்கேற்ற விழா ஸ்ரீ ராதாகிருஷ்ணா சங்கீத வித்யாலயா நிறுவனர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மேனாள் தமிழ் விரிவுரையாளர் திருநாவுக்கரசு, குடந்தை வாணி விலாச சபா செயலாளர் ஜெயராமன், இசையமைப்பாளர் கலைச்செல்வன், துணை வட்டாட்சியர் விமல், காவல்துறை அதிகாரி நந்தகுமார், பிரேம்நாத் பைரன், ஆகியோர் கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மணிகண்டன் பிரியா தம்பதியரின் புதல்வியும் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் ரதிதேவி எட்டு வயது முதல் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் ரதிதேவியின் அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரங்கேற்ற விழாவினை கண்டுகளித்தனர்.