திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபு செல்:9715328420
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவரை தேடும் பணி தீவிரம்.
திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதிக்கு இடையில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து நசுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து பெண்ணை தாக்க பயன்படுத்திய கல் உள்ளிட்டவற்றில் பதிவான கைரேகைகளை தடயவியில் நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர். உடனடியாக உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பூர் மாநகர துணை காவல் ஆணையர் தீபா சத்யன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் ஹண்டர் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர் மோப்ப நாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிலையம் வரை ஓடிச் சென்று நின்று விட்டது. உயிரிழந்த பெண் தனியார் மருத்துவமனை செவிலியர் உடை அணிந்திருந்ததால் அவர் செவிலியரா அல்லது பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவரா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக அவர் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா என்பதும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை உள்ளதும் தெரிய வந்தது மேலும் இவர் திருப்பூருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தான் வந்துள்ளார் என்பதும் பணிக்கு சேர்ந்தும் 20 நாட்கள் மட்டுமே ஆவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விசாரணையில்
11 ஆண்டுகளுக்கு முன்னர் சித்ரா வேறு சமுதாயத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
உசிலம்பட்டி அருகே வாடிப்பட்டி பகுதியில் தங்கி இருந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு தனது 2 குழந்தைகள் மற்றும் தாய் உடன் திருப்பூர் தமிழ்நாடு தியேட்டர் பின்புறம் வீடு வாடகைக்கு எடுத்து அருகில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக சித்ரா பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்
மனைவியை அழைத்துச் செல்ல கணவர் ராஜேஷ் கண்ணா நேற்று திருப்பூரில் சித்ரா பணியாற்றி வரும் மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு வந்த நிலையில் தற்போது சித்ரா சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் கணவர் ராஜேஷ் கண்ணாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆணையர் ஜான் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.