கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரெட்ரோ பட வெளியீடு மற்றும் மே தின விழா
படம் வெளியான சாந்தி திரையரங்கம் முன்பாக கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு சேலை வழங்கி கொண்டாட்டம்
கார்த்தி சுப்பராஜ் இயக்கிய நடிகர் சூர்யாவின் 44-வது படமான ரெட்ரோ உலகம் முழுவதும் வெளியான நிலையில்,கோவையில் ரெட்ரோ வெளியான திரையரங்குகள் முன்பாக அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் கோவை இரயில் நிலையம் முன்பு உள்ள சாந்தி திரையரங்கில் கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மே தின விழா மற்றும் ரெட்ரோ பட வெளியீட்டை கொண்டாடும் விழா நடைபெற்றது..
கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் மே தினத்தை கொண்டாடும் வகையில் தொழிலாளர்களை கவுரபடுத்தும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு சேலை வழங்கப்பட்டது..
இதனை தொடர்ந்து ரெட்ரோ பட வெளியீட்டை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,விஜய்,பகவதி ராஜூ,ஜெகன்,அஜூ,கிரி,பூபதி,சேனாதிபதி மற்றும் நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.