அலங்காநல்லூர்,
மே1 தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் ஊராட்சிகளில் நடப்பு நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடுவார்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மகளிர் உதவி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊர் நல அலுவலர் மீனா, அலங்காநல்லூர் மகளிர் குழு மகாலட்சுமி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம், மற்றும் பாலமேடு போலீசார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் செல்வமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார்.
இதில் ஊராட்சியில் உள்ள மாணவர்களை கட்டாயம் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், வீடுகள் தோறும் குடிநீர், உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். மாணிக்கம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் ஊராட்சி செயலர் பெரிச்சி தீர்மானங்களை வாசித்தார்.
இதில் உடைபாலம் முதல் மாணிக்கம்பட்டி ஊராட்சி எல்கை முடிவு வரை அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஊராட்சிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆதனூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் மாணிக்கம், தீர்மானங்களை வாசித்தார். அய்யங்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராஜா தீர்மான நகலை வாசித்தார்
வடுகபட்டி ஊராட்சியில் கிராம பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சிசெயலர் பங்கஜவள்ளி, தீர்மான நகலை வாசித்தார் டி.மேட்டுப்பட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் ஊராட்சி செயலர் முத்துக்குமார், கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார் இதேபோன்று அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மற்ற ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.