மே தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் அருகில் பிரின்ஸ் பியூட்டி பார்லர் மாடியில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் மே தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், அறிமுக நடிகர் வைத்தியலிங்கம், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, சுல்தான் அம்மா, ரிஷிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு மே தினம் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது