அலங்காநல்லூ
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
முன்னதாக சங்கத் தலைவர் ரவி,மின் அமைப்பாளர் மத்திசங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் சங்க கவுரவ ஆலோசகர் சுப்பாராயலு,சங்க கௌரவத் தலைவர் அலிமுதின், செயலாளர் வெள்ளைகெங்கை, பொருளாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் விநாயகராஜா, மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.