மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற. விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நா. சண்முகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீர்காழி டாக்டர் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் இராம.இளங்கோவன், ஒன்றிய கழக செயலாளர் ஞான இமய நாதன், இளைய பெருமாள், மூவலூர் மூர்த்தி, முருகமணி , நகர செயலாளர் குண்டமணி என்கிற செல்வராஜ், சீர்காழி சுப்பராயன், குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன், பாமக மண்டல செயலாளர் அய்யப்பன், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம். நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கத்தை கையெழுத்திட்டு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் க.துரை, பொருளாளர் ராஜகுமாரன், மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் மணிமாறன், கலந்து கொண்டனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் வைத்தீஸ்வரன் சாமிநாதன் நன்றி தெரிவித்தார்