நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை முஸ்லிம்கள் கடைகளை அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமிஆ பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அங்கிருந்து ஊர்வலமாக விருத்தாசலம் பாலக்கரைக்கு வந்த முஸ்லிம்கள் மத்திய அரசை கண்டித்தும், வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ம.ற்றும் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.