விருத்தாசலம்
தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு எதிராக மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்தில் பல்வேறு சரத்துகளுக்கு தடையானை பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக துணை குடியரசுத் தலைவரும் பாஜக எம் பி நிஷிகாந்த் துபே ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அவர்களுடைய விமர்சனத்தை கண்டித்தும், நீதிமன்றத்தை அச்சுறுத்துவதை கண்டித்தும் சுதந்திரமான நீதித்துறையை பாதுகாக்க வலியுறுத்தியும், விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர்கள் பூமாலை குமாரசாமி, செல்வ பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரகுரு, மாநில குழு சங்கரய்யா, நிர்வாகிகள் வீரப்பன், ராஜ்மோகன், மோகன்ராஜ், ஜாக் துணைத் தலைவர் புஷ்பதேவன், பாரி இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.