திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 30 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் எஸ். ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், ன கல்லூரி செயலர் பிரியா ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் துறை தலைவர் ஞான மலர் வரவேற்றார்.
மேலும் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் வாசித்தார். பிறகு கல்லூரி தலைவர் மு.ரமணன் மற்றும் முதல்வர் எஸ்.ருக்மணி ஆகியோர் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர். அதேபோல் சிறப்பிடம் பெற்ற பேராசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இறுதியில் தமிழ்த்துறை பேராசிரியை எழிலரசி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.