எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக நீர் மோர் பந்தல் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி கிர்னிபழம் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதியில் கோடைக்கால வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல சேது.ரவிக்குமார் தனது ஏற்பாடில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் கிரீனிப்பழம் தர்பூசணி சர்பத் உள்ளிட்டவைகளை வழங்கினார்
மற்றும் பொதுமக்கள் நீர் மோர் அருந்தி இலைப்பார பந்தல் அமைத்து கரகாட்டம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் சீனிவாசன் முன்னால் மாவட்ட கவுன்சிலர் விஜயபாரதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமிபாலமுருகன், நகர செயலாளர் எத்திராஜ் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் செந்தில், அசோக்குமார், காமராஜ், கலாநிதி, எ.ஜி.எஸ்.பாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்