எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் இறால் வளர்ப்பு விவசாயத்திற்கு எதிராக செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடலோர மற்றும் உப்பனாற்று கரையோர பகுதிகளில் விவசாயம் பொய்த பட்டா விலை நிலங்களில் விவசாயிகள் இறால் வளர்ப்பில் 30ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய மாநில அரசுகளின் மானியம் பெற்றே இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன் நிலையில் இறால் வளர்ப்பு உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் நபர்களுடன் இணக்கமாக செயல்படும் மீன் வளத்துறை உதவி இயக்குனரை கண்டித்து மயிலாடுதுறை இறால் வளர்ப்பு விவசாய சங்கத்தினர் சட்டநாதபுரத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட இறால் வளர்ப்பு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பேரணியாக வந்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறால் வளர்ப்பு விவசாயத்திற்கும்,உரிமத்திற்கும் எதிராக செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனரை கண்டித்தும் அவருக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிங்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகரித்து எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.