தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தகவல் எம் பி அறிக்கை.தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் நேர்காணல் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடக்க உள்ளது

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஆணைப்படி மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்கேபி கர்ணா வழிகாட்டுதலின் படியும் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான கலை கார்த்திகேயன் தலைமையில் தேனி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நகர ஒன்றிய பேரூர் கழக பொறியாளர் அணி உறுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடக்க உள்ளது

இதில் மாநில பொறியாளர் அணி செயலியின் மூலம் பதிவு செய்தவர்கள் மேற்கண்ட நேர்காணலில் பங்கேற்கும்படியும் திமுக நகர நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அறிக்கையில் கூறி உள்ளார்.