இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முந்தைய 40 நாட்களும் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

அந்த வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக் காலம் கடந்த மார்ச் மாதம் 5- ஆம் தேதி தொடங்கியது. அன்று பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் வரும் ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கடை பிடிக்கப் படுகிறது. அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்றது.

அந்த வகையில் நேற்று திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் உலக மீட்பர் ஆலயத்தில் நேற்று குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வலங்கைமான் உப்புக் கார தெருவில் உள்ள உலக மீட்பர் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி புறப்பட்டு நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் உலக மீட்பர் ஆலயத்திற்கு வந்தடைந்தது.

குருத்தோலை பவனி தேவாலய பங்குத்தந்தை Fr ஆல்பர்ட் ஒசிடி அவர்கள் தலைமையில், உதவி தந்தை Fr தாமஸ் ஒசிடி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர். குறுத்தோலை பவனி உலக மீட்பர் ஆலயத்தை வந்தடைந்த பின்னர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Share this to your Friends