புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி அருள்மிகு துரௌபதி அம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று அம்மன் வீதி உலா காட்சிகளும் நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வான அர்ஜுனன் திரௌபதி திருமண வைபவ நிகழ்வு மனவெலி மந்தவெளி திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மணமகன் காண்டீபன் என்கிற அர்ஜுனன் மணமகள் திரௌபதி என்கிற பாஞ்சாலி ஆகியோர் சிலைகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல மேடையில் தேவர்களும் உறவினர்களும் புடை சூழ பூ, பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் 50 வகையான பழங்கள் இனிப்பு மற்றும் கார வகைகள் கொண்ட தட்டு வரிசை உடன் பெண் அழைப்பும் அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பும் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து தேவர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மணமகன் காண்டீபன் என்கிற அர்ஜுனனுக்கும், மணமகள் திரௌபதி என்கிற பாஞ்சாலிக்கும் திருமண வைபவம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மாங்கல்ய தானமும் அன்னதானமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பதினாறாம் நாள் மாலையிடுதல் திருக்கல்யாண நடுத்தெரு உபயதாரர்கள், பிள்ளையார் கோவில் வீதி, தண்ணி தொட்டி வீதி, தேர் முட்டி வீதி, திரௌபதி அம்மன் கோவில் வீதி, கலைஞர் நகர், நேதாஜி நகர், ஸ்ரீனிவாசா அவென்யூ ஜெனரல் இன்சூரன்ஸ் காலனி, விக்டோரியா நகர் மற்றும் மனவலி ரோடு சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.