வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் நடைபெற்ற பொது விநியோக திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பாக பல்வேறு மனுக்களை அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் துணை பதிவாளர், மேலாண்மை இயக்குநர் Tccws அரப்பளி தலைமையில் நடைபெற்றது. இதில் வலங்கைமான் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ், வலங்கைமான் கூட்டுறவு சார் பதிவாளர், பொது விநியோகத் திட்ட ரேவதி, வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை, கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.