தேர்ட் ஐ பவுண்டேஷன் (Third Eye Foundation) சார்பாக கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு
நடிகை கெளதமி கலந்து கொண்டு ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார்
மாற்றுக்கிறனாளிகளுக்கான சீரான இடத்தை உருவாக்கும் நோக்கத்தில், செயல்பட்டு வரும் ‘தர்ட் ஐ பவுண்டேஷன் சார்பாக ,ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது…
கோவை ப்ரூக் ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெற்ற இதில்,பிரபல திரைப்பட நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான கௌதமி கலந்து கொண்டு, ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார்.
இதில் தேர்ட் ஐ பவுண்டேஷன் இயக்குனர் சரண்யா ரங்கராஜ் மற்றும் சரணாலயம் நிறுவனர் வனிதா ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்…
இது குறித்து தேர்ட் ஐ ஆட்டிசம் மையத்தின் நிர்வாகிகள் கூறுகையில்,
ஆரம்ப கட்டத்திலேயே ஆட்டிசத்தை கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்..,
இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்வில்,குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான விளையாட்டு நிகழ்ச்சிகள்,முகவரி ஓவியம் மற்றும் கலந்துரையாடல் அம்சங்கள்,சிறந்த ஆட்டிசம் குழந்தைகளின் “ஃபேஷன் வாக்” உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன..