கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மைய மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் முகமது யூசப், வழக்கறிஞர் சிபு, சூல்பிக்கர் அலி, அன்வர் உசேன், செய்யது அலி, சாதிக் அலி, உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் முருகன், முகமது, அருண்,ஜெகதீஷ், , ஜெஸ்டின்,பேதுரு, சுதா, லதா, பிரேமா,கவிதா, ராஜகுமார்,ரஞ்சித்,மணிகண்டன், சார்லஸ், தீபக்,செல்வகுமார், நிசார், சாதிக், மணிகண்டன், ராஜகோபால், சிவகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.