பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ரஜினிகாந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காரவி,மற்றும் முன்னாள் மண்டல செயலாளர் செயலாளர் விவேகானந்தன், நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை.புர்கானுதீன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கையில் பதாகையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.