மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி வரும் பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளைக் கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரியலூர் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டாய இந்தி திணிப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்க முயற்சிப்பது, கல்விக் கொள்கையை வைத்து நிதி தருவதை நிறுத்துவது பண்டித ஜவஹர்லால் நேருவின் உறுதிமொழியை மீறி தமிழ்நாட்டு மக்கள் மீது மும் மொழி கொள்கையை கொண்டு வர முயற்சிப்பது மகாத்மா காந்தி பெயரில் இயங்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பண உதவி குறைப்பது தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய 4034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ள பாஜக அரசை கண்டித்து மாவட்டத் தலைவர் ஆ .சங்கர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு.சிவகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் மனோகரன் ஆண்டிமடம் ராஜசேகரன் பி.சி.சி. வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன் கர்ணன் கங்காதுரை சக்திவேல் அருளானந்தம் மகிளா காங்கிரஸ் சகுந்தலா தேவி இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகழ்ராஜ் எஸ் சிபிரிவு தலைவர் சுரேஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிக்கோலஸ் ராஜ் பூண்டி சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரஸ் செந்தில் மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன் சண்முகம் அறிவழகன் சந்திரசேகர் பிசிசி தியாகராஜன் பிசிசி வாலாஜா நகரம் நல்லதம்பிமற்றும் ஏராளமான காங்கிரஸ் செயல் வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ஏ பி எஸ் பழனிச்சாமி நன்றி கூறினார். முடிவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஜனநாயக செயல்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது