வானமும் வசப்படும்”
வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர் எஸ் கே இன்டர்நேஷனல் பள்ளியின் “வானமும் வசப்படும்” 9வது ஆண்டு விழா மற்றும் குடும்ப சந்திப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் எஸ்.பாலச்சந்த சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “வானமும் வசப்படும்”எனும் தலைப்பில் பெற்றோர்களின் கடமை, தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு நட்புறவோடு பழக வேண்டும்.பெற்றோர் தான் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.பெற்றோர்கள் சிறந்த பழக்கவழக்கத்தோடு இருந்து குழந்தைகளை நல்ல முறையில் மேன்மைப்படுத்த வேண்டும். பள்ளி குழந்தைகள் விடாமுயற்சியோடு சிறப்பாக செயல்பட்டால் வானமும் வசப்படும் என்றும் சிறப்புரை ஆற்றினார்.
இதில் பள்ளி இயக்குநர் ரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார்.இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் 10 மற்றும்12 வது வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வன், அசோகன், மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ்,சீத்தாராமன்,ஆர்விபி செந்தில் ரெட்டி,தங்கமயில் வேல்முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்