தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சியில் புதிய வாழ்க்கை சங்கம், ஜெபமாலை அறக்கட்டளை, அமைதி சுகாதார மையம், வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவிந்தப்பேரி ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எஸ்.இசேந்திரன் பள்ளி நிர்வாகி ஜி.அல்போன்ஸ், நிரந்தர புரவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் திருநெல்வேலி அமைதி சுகாதார மையத்தின் சார்பில் டாக்டர் ஆர்.அன்புராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய கடிதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் கோவிந்தப் பேரி ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் ராமசாமி பாண்டியன், சுடலை முத்துபாண்டியன், மேத்துராஜ், கோமுபாண்டியன், சுப்பையா பாண்டியன், வனத்துறை மாணிக்கம், முருகன், மாரித்துரை, சிவா, கோவிந்தப்பேரி ஊராட்சி 2 வது வார்டு உறுப்பினர் இளவரசி, 3 வது வார்டு உறுப்பினர் பொன்னுதாய். 4வது வார்டு உறுப்பினர் சுகிர்தா, 5வது வார்டு உறுப்பினர் நாகராஜன் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பேபி, அன்னலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தப்பேரி ஊராட்சி செயலர் பரமசிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.