தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, தமிழ்செல்வன், பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர்கள் இலத்தூர் பூ. ஆறுமுகசாமி, வடகரை சேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அருள், தமிழ்செல்வி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் வரவேற்றார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் தொகுப்புரை ஆற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, முன்னாள் எம்.பி. விஜிலா சந்தியானந்த், மாநில பேச்சாளர்கள் ஆரணி மாலா, குடியாத்தம் புவியரசு ஆகியோர் பேசினர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ஜெயக்குமார், சிவன்பாண்டியன், மகேஷ்மாயவன், செல்லத்துரை, அன்பழகன், நகர செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், சுரண்டை கூட்டுறவு கணேசன், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, ஆலங்குளம்நெல்சன், முக்கூடல் லட்சுமணன், சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம், சாம்பவர் வடகரை முத்து, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ரஜப்பாத்திமா, வைத்தீஸ்வரி, மல்லிகா சரவணன், சுசீலா, சரஸ்வதி, சுந்தரி, கற்பகசெல்வி, மாரியம்மாள், ராசாத்தி,ஷாலி மேரி, ஹபீப்நிஷா, பாண்டிராணி, ராஜேஸ்வரி, மாரிசெல்வி, சபர் நிஷா, விமலாராணி, மாரிசெல்வி, சிவசண்முக ஞான லட்சுமி, கலாநிதி, சமுத்திரகனி, தனலட்சுமி, ஷோபனாராணி, மல்லிகா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நகரச் சிறந்த நிர்வாகிகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காப்போம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *