ரமலான் பெருநாளை முன்னிட்டு தென்காசியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மதீனா நகர் மஸ்ஜிதுர் ரகுமான் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முஸ்தபியா நடுநிலைப்பள்ளி திடலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் மசூத் அலி தலைமை தாங்கினார் பள்ளியின் இமாம் அயூப் அலி தொழுகை நடத்தி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணைத் தலைவர் மைதீன் சேர்த்தான் செயலாளர் அம்மா னுல்லா பொருளாளர் ரிசர்வ் முகமது துணைச் செயலாளர்கள் நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் நைனார் முகமது அலி பாரூக் ரஷீத் முகமது மைதீன் சையது சுலைமான் பீர் ஜாப் பள்ளியின் செயற்குழு உறுப்பினர்கள் ஜமால் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சலீம் மைதீன் முகமது பிலால் ஆபா வீல் மைதீன் இஸ்மத் மீரான் கோயம்பீர் சாகுல் ஹமீது அப்துல் ரகுமான் திவான் ஒலி மீரான் ஹக்கீம் கோதரி மசூது தமுமுக நிர்வாகிகள் ஆதம் பின் ஆசிக் களஞ்சியம் பீர் சாகுல் கமீது மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் பெருநாள் தினத்திற்கு முன்பாக ஏழைகளுக்கு பள்ளிவாசலின் சார்பாக அரிசி மற்றும் உணவு வகைகள் வழங்கப்பட்டது தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தென்காசி ஜாப் ஜமாத் அமைப்பின் சார்பில் நேற்று காலை 7 மணி அளவில் ஈதுல் பிதர் பெருநாள் தொழுகை பழைய ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் உஸ்மான் பீர் தவசி தொழுகை நடத்தி குத்பா பேருரையை நிகழ்த்தினார் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
தென்காசி அருகே வல்லம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வல்லம் கிளையின் சார்பில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் வல்லம் அகமது தொழுகை நடத்தி உரையாற்றினார் இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர் ஒருவரை ஒருவர் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி அன்பை பரிமாறிக் கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது தொழுகைக்கான ஏற்பாடுகளை கிளை பொருளாளர் திவான் ஒலி அப்துல்கமது சாகுல் ஹமீது முகமது அனஸ் அக்பர் அலி ஆகியோர் செய்திருந்தனர்.
தென்காசி மேற்கு கிளை சார்பில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது நேரும் மேல்நிலைப்பள்ளி திடலில் மாநில பேச்சாளர் ஹாஜா தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார் இதில் ஆண்கள் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.