கம்பம் நகரில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் அஜீஸ் அம்பா திடலில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் புனிதத் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாட உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் நகர் வர்த்தக சங்க தலைவர் எல். முருகன் தலைமை வகித்தார். இருதயநோய் சர்க்கரை நோய் நிபுணர் முன்னாள் தேனி மாவட்ட இணை இயக்குனர் ஏ. சையது சுல்தான் இப்ராஹீம் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் இஸ்லாமிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.