செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார்பில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் மறுபடியும் பள்ளிகள் திறப்பையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மாதவரம் கோட்டாட்சியர் பெருமாள், கல்வித்துறை அதிகாரிகள் ,தீயணைப்பு துறை அதிகாரி பரமேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில் வாகனங்களில், முதலுதவி பெட்டி, இருக்கைகள் ,அவசரகால ஜன்னல்கள், படிக்கட்டுகள் சென்சார் , தீயணைப்பான் ஆகியவை சரியான முறையில் உள்ளதா எனவும் ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் பற்றிய அறிவுரையும் அவசரகால பேரிடர்களுக்கு அதிகாரிகளின் தொடர்பு எண் தெரிந்து வைத்திருக்க அவசியம் எனவும் பள்ளி வாகனங்களில் ஓட்டுநருடன் அட்டெண்டர் அவசியமாக இருக்க வேண்டும் எனவும் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி இறக்கும் போது பாதுகாப்பாகவும் பத்திரமாக அவர்களை இறக்கிவிட அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.
மேலும் தீ விபத்தின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகாரி ராபர்ட் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.இந்த ஆய்வின் போது கொளத்தூர் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் சுமார் நூற்றுக்கு மேற்பட்டு உள்ள வாகனங்களை முழுவதுமாக ஆய்வு செய்த அதிகாரிகள் சரியாக பராமரிக்கப்படாத வாகனங்களை திருப்பி அனுப்பி சரி செய்து மறு தேதிக்கு அலுவலகத்தில் வந்து காண்பிக்குமாறு அறிவுறுத்தினர்..
