துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவ சரவணன் தலைமையில் 29/03/2025 அன்று ஒன்றிய அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்திற்க்கான நிதியை தராததை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, நகரமன்ற தலைவர் செல்வராணி, பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை,மாவட்ட பிரதிநிதி மதியழகன், நகர் மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன், இளையராஜா ,மதுராபுரி உமாபதி, நடுவலூர் செல்வகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்