மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வாடிப்பட்டியில் இயங்கி வரும் ஹெல்பேஜ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 47 வருடங்களுக்கு மேலாக முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு இலவச முதியோர் காப்பகம் மற்றும் நடமாடும் மருத்துவ சேவையை ஏழை எளிய மக்களுக்கு இல்லம் தேடி மருந்து மாத்திரைகளை மருத்துவ ஆலோசகர் கொண்டு கிராம புறம் மற்றும் நகர் புறம் சென்று மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறது.அதில் ஓர் கிளையான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இயங்கி வரும் ஹெல்பேஜ் இந்தியா ஆறு வருடங்களுக்கு மேலாக இலவச மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறது.
மார்ச் மாதம் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் வட்டார மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாமை செய்து முடித்து 1500 க்கும் மேற்பட்டோர் பயனாளிகள் பயனடைந்துள்ளனர், இதில் நேற்று கோட்டைமேடு, பெரியஊர்சேரி கிராமங்களில் முகாமை நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர் குணவாளன், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.
வாடிப்பட்டி ஹெல்பேஜ் டாக்டர். தினேஷ்பாபு மருத்துவ ஆலோசகர்,செவிலியர் மற்றும் மருந்தாளார் மருத்துவ பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.இதில் 125 பேருக்கு மேலாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கர்ணன், சமூக பாதுகாப்பு ஆர்வலர் சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.