ராமேஸ்வரத்தில் திமுக பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மக்களின் விடியல் ஆட்சிநடத்தி வரும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பட்ஜெட் சாதனைவிளக்க பொதுக்கூட்டத்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் இராமேஸ்வரம் நகர் கழகத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்சியில் கழக அமைப்பு செயலாளர் .ஆர்.எஸ்.பாரதி கழக வழக்கறிஞர் இணை செயலாளர் .சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் ஒன்றிய,நகர,பேரூர்,கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மாநில,மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.