மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி வெள்ளையம்பட்டி
டி.மேட்டுப்பட்டி தனிச்சியம் ஆகிய கிராமப் பகுதிகளில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலையை திட்டத்தில் ஊதியத்தை உடனே விடுவிக்க கோரியும் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசே மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தில் வேலையை மட்டும் வாங்கிக் கொண்டு ஊதியத்தை தரவில்லையே தரவில்லையே தமிழக அரசு தங்களிடம் நிதியை கேட்டு இதுவரையும் கொடுக்கவில்லையே கொடுக்கவில்லையே என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், அருண்குமார், பொருளாளர் சுந்தர், பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி, செந்தில்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள்
வாவிடமருதூர் கார்த்திகேயன், பிரதாப் விஜயகுமார், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, மருது, யோகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ் சிறுபான்மை பிரிவு ரியாஸ்கான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..