கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு நிகழ்வு கல்லூரி உள்அரங்கில் இனிதே நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இராயப்பராஜ் அனைவரையும் வரவேற்றார்.
சந்திப்பு நிகழ்வில் இந்தக் கல்லூரியில் 2010-2013 ஆம் கல்வியாண்டில் பயின்று தனது வாழ்வில் பல்துறையில் சிறப்பாக இயங்கி சாதனை படைத்து இந்நாள் மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் முன்னுதாரணமாக விளங்கும் முன்னாள் மாணவர் தூயதமிழ் இளைஞர் பாசறையின் நிறுவுநர் தலைவர் விரிவுரையாளர் சி.தமிழ் மணிகண்டன் அவர்களின் பல்துறை சாதனைகளைப் பாராட்டி விழாவில் அவருக்கு “புகழ்மிக்க முன்னாள் மாணவர் விருது” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

உடன் எஸ் என் எஸ் கல்லூரியின் பேராசிரியர் ஆளுமைத்திறன் பயிற்றுநர் ஜெகதீஷ் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இக்கல்லூரியில் பயின்ற 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர். மாணவர்கள் பலர் தனது அனுபவங்களையும் பகிர்ந்து உரையாற்றினர்.