பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் திமுக வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் மனசு வைக்க வேண்டும் :
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்
எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்:
முதல்வர் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்.
நிரந்தரம் செய்யக் கோரி மனு அனுப்பினோம்.
முதல்வரிடம் நேரிலும் பலமுறை மனு கொடுத்தோம்.
சட்டமன்றத்திலும் பலமுறை எடுத்துரைக்கப்பட்டது.
மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகிறது.
போராட்டங்களும் செய்தோம்.
இவ்வளவுக்கு பிறகும் முதல்வர் மனசு வைக்க வில்லை.
இதனால் 14 ஆண்டாக தற்போது 12,500 ரூபாய் குறைந்த சம்பளத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 46,767 கோடி ஒதுக்கியதில் இருந்து 300 கோடி ஒதுக்கி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
110 அறிவிப்பில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற வேண்டும்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்: 9487257203