எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனடியாக சுவேதாரனேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான முக்குளங்கள் உள்ளன இங்கு சிவபெருமான் அகோர மூர்த்தி சுவாமியாக அருள்பாலிக்கிறார் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையாக இக்கோயில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன
முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கினார் அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற இந்த நந்தி பகவானுக்கு பங்குனி மாத பிரதோஷத்தை ஒட்டி மா பொடி, மஞ்சள் ,திரவியப்பொடி, பால் ,தயிர், இளநீர், பன்னீர் ,பஞ்சாமிர்தம், சந்தனம், பழச்சாறு முதலான நறுமண வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் பல்லக்கு வாகனத்தில் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது திரளான பக்தர்கள் வீதி உலாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.பிரதோஷ பூஜைகளை வினோத் குருக்கள் செய்து வைத்தார்.