தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினர்
மற்றும் அமைச்சு பணியாளர்கள் சுமார் 70 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் 1700 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பகிர்ந்து வழங்கி அனைத்து காவல் நிலையங்களிலும் மரம் நட்டு பராமரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends