தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி கலந்து கொண்டு பேசினார்.

“தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையினால் பள்ளிக்குழந்தைகளின் கல்வி திறன் அதிகாரிக்கும். எளிய மக்களின் குழந்தைகள் மூன்றாவது மொழியான இந்தி மொழியை கற்க கூடாதா என்று கேள்வி எழுப்பினார்

மேலும் அவர் பேசுகையில் டாஸ்மாக் துறையில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது.மக்கள் முன் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்றும் . மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களான தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. மிகவும் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்க ரூ.7 கோடியும். நகர்ப்புற குடிநீர் மற்றும் தூய்மை பணிக்கு ரூ.1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்களை செயல்படுத்துவார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.எனவே மூன்றாவது முறை மட்டுமல்லாமல் இனி அனைத்து முறையும் மோடி தான் இந்திய பாரதப் பிரதமர் “என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு சன்னாசிபாபு பாராளுமன்ற முழு நேர ஊழியர் முருகன் முன்னாள் நகர தலைவர் முத்துப்பாண்டி நகர பொதுச்செயலாளர் சோமசுந்தர சரவணன்,நகரத் துணைத் தலைவர் நாராயணன்,நகர பொருளாளர் ராஜசேகர்,மாவட்ட நிர்வாகிகள் வினோத்குமார் மோகன்தாஸ் பாண்டியராஜன் சிவகுமாரன் உள்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தெருமுனை பிரசாரத்தில் கலந்து கொண்டநிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தாமரை சேவகன் ராஜசேகர் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *