கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கினார்.
சித்தம்மாள் மற்றும் தாமோதரன் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அகரம் கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர் விழாவில் மாணவர்களின் பன்முகதிறன்களை வளர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ஆண்டு விழாவில் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பெரியண்ணன், சீனிவாசன், வைரம், சதீஷ், கோடீஸ்வரன், வெற்றிநாதன், சரண், நாகராஜ், கார்த்தி பள்ளியின் சமையலறார்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.