தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் ஷேக் பரித் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பள்ளிவாசலில் இருந்து இமாம், முத்துவல்லிகள் மற்றும்
இஸ்லாமிய பெருமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மிக சிறப்பாக நடந்த இவ்விழாவில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட துணைச் செயலாளர் சொர்க்கம் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி ரமேஷ் மற்றும் நகர இளைஞரணி, மாவட்ட இளைஞரணி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends