முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் உழவர் சந்தையில் கடந்த 22/3/25 அன்று முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி மாணவிகள் தங்கள் இறுதி ஆண்டின் ஒரு பகுதியான கிராமப்புர விவசாய பணி அனுபவதிட்டம்(RAWE)-விற்காக உழவர் சந்தையின் பயன்களையும், நலத்திட்டங்களையும் மற்றும் உழவர் சந்தையின் செயல்பாடு விதிமுறைகளை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் எடுத்துரைத்தனர்.


மேலும் உழவர் சந்தையின் சிறப்புகளான விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உள்ள நேரடித் தொடர்பு, பொருட்களின் தரம் மற்றும் சுவை, இலவச வசதிகளுடன் வியாபாரம், பொதுமக்களுக்கு விலைபட்டியல், தினசரி வியாபாரம் மற்றும் நியாய விலையில் பொருட்கள் என்று பல சிறப்புகளை மாணவிகள் அனைவருக்கும் புரியும்படி எடுத்துறைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளையும், நுகர்வோர்களையும் அதிகபடுத்துவது மட்டுமின்றி காய் மற்றும் கனிகள் இடைத்தரகர்கள் இன்றி நியாய விலையில் கிடைப்பதை தெரிவிக்கவே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Share this to your Friends